சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தானா?

Advertisements

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் போலவே டிவி சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் புதுப்புது சீரியல்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆகுவதிலிருந்து இதற்கான வரவேற்பை தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இல்லத்தரசிகள், முதியோர்கள் எனப் பலரும் தொலைக்காட்சி தொடர்களை ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

சினிமா ஹீரோ ஹீரோயின்களை போன்று தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்தச் சின்னத்திரை நடிகர், நடிகைகளைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை நாம் பார்க்கலாம்.

சினிமாவில் நடிகர்களுக்கு லட்சங்கள் முதல் கோடிகள்வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதே போன்று சின்னத்திரையிலும் யார் யார் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை அறிவதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்ச ரூபாய் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு என்ற சீரியலில் கதாநாயகியாகச் சுவாதி கொண்டே நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். சுவாதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படும் நிலையில் இவர் நாள் ஒன்றுக்கு 1 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *