மாதாந்திர உரிமைத் தொகை .. வந்தாச்சு புதிய அப்டேட்..! நிதி அமைச்சர் அறிவிப்பு..!

மாதாந்திர உரிமைத் தொகை உதவித் திட்டம், வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மரியா வில்சன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் நிதி அமைச்சர் மரியா வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திட்டமிடப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர உரிமைத் தொகை உதவித் திட்டம், வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை உதவித் திட்டம் வட மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது என்று கூறினார். மேலும், திமுக நிர்வாகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக அரசு தயாரித்து வருவதாகத் தெரிவித்தார். இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். கடந்த அரசாங்கத்தின் கடன் தள்ளுபடி திட்டத்தின்போது, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. தற்போது, விவசாயக் கடன் தள்ளுபடிகளை செயல்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, தவெக அரசு விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகளை செயல்படுத்தும்போது, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படியே செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *