அபிஷேக் பானர்ஜிக்குச் சிகிச்சை அளிக்க விடாமல் சதிவேலை நடக்கிறது – மம்தா ஆவேசம்.!

அதிகாரத்தில் இருப்பவர்கள் அபிஷேக் பானர்ஜிக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து மருத்துவமனைகளையும் அதன் உயர்மட்ட அதிகாரிகளையும் அவரை அனுமதிக்கக் கூடாது என்று மிரட்டி வருவதாக முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் அபிஷேக் பானர்ஜிக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து மருத்துவமனைகளையும் அதன் உயர்மட்ட அதிகாரிகளையும் அவரை அனுமதிக்கக் கூடாது என்று மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார்தான் மருத்துவமனை நிர்வாகியுடன் அமர்ந்திருந்தபோது, காவல்துறையினரிடமிருந்து தமக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக அந்த நிர்வாகி தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, மிரட்டப்படுகிறார்கள் என்று கூறினார். மேலும், ராகுல்காந்தி, அபிஷேக் பானர்ஜியை சிகிச்சைக்காக ஹைதராபாத் அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லத் தயாராக இருப்பதாகத் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *