ரஜினியின் பாராட்டால் நெகிழ்ந்த விஷ்ணு விஷால்!

கட்டா குஸ்தி 2′ திரைப்படத்தைப் பற்றி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பாராட்டியது, தமக்கு மிகுந்த ஊக்கமாக அமைந்தது என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த கடந்த ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் கணவன் மனைவியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 10 நாட்களில் இத்திரைப்படம் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை வாழ்த்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கட்டா குஸ்தி 2 படம் கலகலப்பான, பொழுதுபோக்கு நிறைந்த படம் என்று குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். அனைவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் படத்தில் சிறுமி சாராவும் சிறப்பாக நடித்திருப்பதாகக் கூறியதாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திடமிருந்து பாராட்டு பெரும் ஊக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *