“தளபதி வந்தா தள்ளிப் போகணும்” – ‘இம்மோர்டல்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

Advertisements

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இம்மோர்டல்’. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன் மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதே ஜூலை 23-ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக, ஜி.வி. பிரகாஷ் தனது ‘இம்மோர்டல்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளார். அதன்படி, இப்படம் தள்ளிவைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்து ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்! அதுவும் ஒன் லாஸ்ட் டைம். ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சக நடிகரின் பெரிய படத்திற்கு வழிவிட்டு, அவர் காட்டிய இந்த முதிர்ச்சியான அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *