தமிழ் முருகன் – தனுஷின் கதாபாத்திரம் வெளியீடு!

Advertisements

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிபெற்ற நிலையில், இந்த கூட்டணியில் இணையும் புதிய திரைப்படம் ‘தமிழ் முருகன்’. அறிவுமதி கதை எழுத, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில், படத்தின் அடுத்தக்கட்டமாக தனுஷின் கதாபாத்திரம் குறித்த சிறப்புக் காட்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய உள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ படத்தில், விஜய் சேதுபதியின் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில், அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *