
சோனார்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சோனார்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியமான ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று கூறினார்.
இது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் கொடூரமான முகத்தைக் காட்டுவதாகத் தெரிவித்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் இருதரப்பும் குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்களது பாதுகாப்பைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அபிஷேக் பானர்ஜி, தனது எண்ணங்கள் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இருக்கின்றன. நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.


