Sexual Harassment: 75 ஆபாச வீடியோக்கள் வைரல்!

Advertisements

பிளஸ் 1 மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்சிங் பல்வேறு பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 75 வீடியோக்கள், 100 போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார், வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்சிங் (32). கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ், சுந்தர்சிங்கை கைது செய்தனர். பின்னர் சுந்தர்சிங்கின் செல்போனை கைப்பற்றிச் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 75 ஆபாச வீடியோக்கள், 100க்கும் மேற்பட்ட நிர்வாண போட்டோக்கள் சிக்கியது. இந்நிலையில், சுந்தர்சிங் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாணவிகளை விளையாட்டில் உயர்ந்த நிலையில் கொண்டு வருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியே சுந்தர்சிங் மாணவிகளை மயக்கித் தனது ஆசையைத் தீர்த்துள்ளார். செல்போனில் வாட்ஸ் ஆப் காலில் பேசி மாணவிகளை, ஆசிரியர்களை நிர்வாணமாகத் தோன்ற கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டுப் பெண்கள் நிர்வாணமாகத் தோன்றும் காட்சிகளை அவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். மாணவிகளின் தாயார்களிடம், மாணவிகளை மாநில அளவிலான போட்டிகளில் ஆட வைப்பேன். தேசிய போட்டிகளுக்கு அழைத்துச் செல்வேன் என்றெல்லாம் கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார். சிலரை மிரட்டியும் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை அவர் இவ்வாறு தனது பாலியல் வலையில் வீழ்த்தி உள்ளார். அவரது தொலைபேசியில் மாணவிகள், பெண்களின் தொலைபேசி எண்கள் அதிகம் இருந்துள்ளன. இதுவரை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டு 10 பள்ளிகளில் பணியாற்றியுள்ள சுந்தர்சிங் ஒவ்வொரு பள்ளியிலும், பாலியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்ட பின்னரே அங்கிருந்து துரத்தப்பட்டுள்ளார். பின்னர் வேறு பள்ளிகளில் மீண்டும் சேர்ந்துள்ளார். சேர்ந்த இடங்களில் எல்லாம் அவர் ஆசிரியைகளையும், மாணவிகளையும், அவரது தாயாரையும் தனது வலையில் வீழ்த்தித் தனது பாலியல் கைவரிசையை காட்டி வந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *