Women’s Reservation Bill
புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அதனை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு உள்ளது.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அதனை அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.


