
டைனிங் டேபிளில் புகுந்த கரடி!
மெக்ஸிகோவில் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றவர்களைக் கரடி ஒன்று கலாட்டா செய்து, உணவுப் பொருட்கள் மொத்தமும் காலி செய்தது. அமெரிக்காவின் வடக்கு மெக்ஸிகோ பகுதீயில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தார் அங்குள்ள இயற்கை அழகை ரசித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கரடி ஒன்று அவர்கள் அம்ர்ந்திருந்த டைனிங் டேபிள் மீது அமர்ந்து, மேஜை மீது இருந்த உணவுப்பொருட்களைப் பதம் பார்த்தது. பயந்து போன அக்குடும்பத்தார், சிலைபோல உட்கார்ந்திருந்து, தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

