தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்துச் சென்னையில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தவெக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார். குற்றஞ்செய்ய நினைப்பவர்கள் தவெகவில் இணைவதாகவும், ஏற்கெனவே தவெகவுக்கு வாக்களித்த பெண்கள் இப்போது வருத்தப்படுவதாகவும் கூறினார்.

