தேசிய ஒருமைப்பாட்டு நாளையொட்டிக் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லப் பாய் பட்டேல் சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், முதல் துணைப் பிரதமராகவும் இருந்தவர் வல்லப் பாய் பட்டேல். விடுதலை பெற்ற இந்தியாவில் இருந்த சுதேச சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர். அதனால் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 31 தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. வல்லப் பாய் பட்டேலின் 152ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று குஜராத்தின் கேவடியாவில் உள்ள அவரின் சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒற்றுமை நகரில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஒற்றுமை நகரில் உள்ள மழைக்காடுகளையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்குள்ள குட்டை மரங்களின் தோட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.



