அக்ராபாளையத்தில் கோலாகலமான கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திரெளபதியம்மன் உடனுறை தர்மராஜா கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆரணி அடுத்த அக்ராபாளையத்தில் திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜா கோவிலில் யாகசாலை அமைத்துப் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்துச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கும்பாபிஷேக விழாவில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரன், திமுக தொகுதிப் பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்துப் பூசிக்கப்பட்ட புனித நீரைப் பட்டாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் உச்சியில் உள்ள கோபுரக் கலசத்தின் மீது ஊற்றிக் கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகப் புனித நீரை மக்கள் மீது தெளித்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *