கடந்த கால ஆட்சிக் காலங்களில் தமிழக காவல்துறையை திமுக குடும்பம் மட்டுமே முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் ஏன் உடன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர், தமிழக தொழில்துறை அமைச்சருக்கு நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லை என்றும், இதுபற்றி வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்று ஒவ்வொரு விசயத்திற்கும், எதிர்க்கட்சிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் கூறினார்.
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் விவகாரம் மற்றும் முந்தைய விசாரணைகள் குறித்த கேள்விகளுக்குத் திமுக ஒருபோதும் பதில் சொல்லாது எனக் குற்றம்சாட்டினார். கடந்த கால ஆட்சிக் காலங்களில் தமிழக காவல்துறையை திமுக குடும்பம் மட்டுமே முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகச் சாடினார்.
மேலும், காவல்துறை உயர் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்களைக்கூட அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர்களே தீர்மானித்து இயக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சியில், காவல்துறை நிர்வாகத்தின் பணிகளில் அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையீடுகளும், அழுத்தங்களும் இருக்காது என உறுதியளித்தார்.


