கோவை சிறையில் கைதி தப்பியோட்டம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பிச் செல்வது, சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பிச் செல்வது, சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகியுள்ளதாக விமர்சித்துள்ளார். இன்று சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் விஜய் செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவைச் சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *