
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மிதமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். சாதகமான பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும். துணையை வெளியடங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்குசுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். பண புழக்கம் போதிய அளவில் இருக்காது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிறிது கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் கண்களில் வலி ஏற்படலாம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பணியில் கவனம் தேவை. துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஜீரணக் கோளாறு, தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை எளிதாக ஆற்ற இயலாது. பணிகளைக் கையாளும்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பணியில் கவனம் செலுத்த வேண்டும். துணையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பணப்புழக்கம் இருக்காது. ஆரோக்கியத்தில, கண் எரிச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை நல்ல முறையில் செய்வீர்கள். மேலும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இதனால், உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். பணியிடத்தில் பணிகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மேலும், சிறப்பான வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். அதனைப் பயனுள்ள விஷயங்களுக்குகாகச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது.எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். பணியில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. பணத்தை கையாளும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பணப்புழக்கம் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். இதனால், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாகக் காணப்படும். இதனால், உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுக்கலாம். நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலும், மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு அதிகமாகக் காணப்படும். அதனைப் பயனுள்ள விஷயங்களுக்காகச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கும். மேலும், கீழ் பணி புரிபவர்களால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரும். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கண்களில் கவனம் செலுத்துவது நல்லது.


