முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டித் தில்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி தனது மெய்க் காவலர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டித் தில்லி சக்தித் தலத்தில் உள்ள அவர் நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் தரைலவர் மல்லிகார்ச்சுன கார்கே ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *