தமிழகத்தில், 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில், 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு கடலோர ஆந்திராவையொட்டி உள்ள பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடலையொட்டி உள்ள வடக்கு கேரள கடலோரப் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது போன்ற வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அக்டோபர் 12 முதல் 17 வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *