
போதை பொருள் விற்பனையில் திமுக தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது எனப் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83 வது வார்டு காட்டூர், 70 வார்டு தெப்பக்குளம் மைதானம் மற்றும் 68 வார்டு சிவானந்தா காலனி ஆகிய மூன்று பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம்குடிநீர் இயந்திரத்தை எம்.எல்.ஏ.பா.ஜ.கத்தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன்பொதுமக்களுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தை என்பதை பொறுத்த வரைக்கும் அகில இந்திய அளவிலே இருக்கின்ற சூழல் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற வரையிலும் கூடக் கூட்டணிகள் வருவார்கள், இதற்கு முன்பும் அதனைப் பார்த்து உள்ளதாகவும், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு கட்சிகள் வந்து கொண்டு உள்ளதாகவும், டெல்லியில் ஒவ்வொரு நாளும் புதுக் கட்சிகள் வந்து கொண்டு உள்ளதாகவும், தேர்தல் நெருங்குகின்றபோது ஒரு பிரம்மாண்டமான சேனையுடன் இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
தி.மு.க இதுவரைக்கும் இருந்த கூட்டணியில் இடம் கொடுப்பதற்கு இழுபறியாக உள்ளதாகவும்,
குழந்தைகளைக் கெடுக்க கூடிய போதை பொருள்களின் நடமாட்டத்தை ஆளுங்கட்சியின் ஆதரவோடு இருக்கும் நபர்கள் செய்யும்பொழுது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்கனவே பெண்களின் ஆதரவு பெரிதாகக் கிடையாது என்றும், இப்படி இருக்கின்ற நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், குழந்தைகளுக்குப் போதை பொருள் விற்கின்ற நபர்களையும் உடன் வைத்து உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் தொடர்பு வைத்து உள்ளவர்களை உடன் வைத்து உள்ளதாகவும், இவ்வளவு செல்வாக்குடன் அந்த நபரை வைத்து உள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டு உள்ளதாகவும், இன்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.பாண்டிச்சேரியில் ஒன்பது வயது குழந்தைக்கு நடந்த கொடூரம் மனதை உலுக்குகின்ற சம்பவம் என்றும், போதைப் பொருள் எதிரான செயல்களை முன் எடுத்துக் கொண்டு உள்ள நிலையில் இது போன்று பச்சிளம் குழந்தைகள் கொடூரமாகச் சிதைக்கின்றபோது ஒட்டுமொத்த சமூகத்தையும் மனதை உலுக்கின்ற நிகழ்வாக உள்ளதாகவும், அந்த நிகழ்வைப் பொறுத்த வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதற்காக அங்கு இருக்கின்ற அரசும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் இது மாதிரியான சமூகத்தில் மன வியாதி கொண்ட நண்பர்களைப் போதைப் பொருள் ஊக்குவிக்கின்றது, என்பதால் தான் அதற்கு எதிராக நிற்பதாகவும், பா.ஜ.க இளைஞரணி சார்பாகக் கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு முன்பாகப் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வரும் திங்கள் முதல் ஆரம்பிக்க உள்ளதாகக் கூறினார்.
நீங்கள் நலமா ? என்ற கேள்வியுடன் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது குறித்தான கேள்விக்கு
அதுதான் நாங்கள் அனைவரும் நல்லா இல்லை!!! நல்லா இல்லை!!! என்று மக்களும் கூறுவதாகவும், அரசியல் கட்சிகள் கூறவில்லை என்றும் சாதாரண மக்கள் கூறுவதாகவும் கூறினார்.
கோவையில் குப்பைகளை அகற்றாமல், டாஸ்மார்க் கடைகளை முக்கிய பகுதிகளில் திறந்து வைப்பதாகவும், மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும், சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு உயர்வு, அனைத்து துறைகளையும் விட்டு வைக்காமல் நீங்கள் நலமா ? என்றால் முதல்வரின் குடும்பம் மட்டுமே நலமாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார். அது தாண்டித் தமிழகத்தில் ஒருவரும் நன்றாக இல்லையெனத் தெரிவித்தார்.


