திரைப்பட நடிகர் பெஞ்சமின் குழுவின் தத்ரூப நடிப்பு..!

சேலத்தில் உண்மையான விபத்து நிகழ்ந்தது போன்று சாலைப் போக்குவரத்துக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் தலைக்கவசம் அணிவதன் தேவையை வலியுறுத்திச் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. மாநகரக் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விழிப்புணர்வுக் குறும்படம் ஆக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில், ஆய்வாளர் கிட்டு, உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் குறும்படக் காட்சிகள் படமாக்கப்பட்டன. திரைப்பட நடிகர் பெஞ்சமின் கலைக் குழுவைச் சேர்ந்த நாடக நடிகர்கள் இதில் நடித்துக் காட்டினர். சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *