Cyclone Michaung Impact: 25 ஆயிரம் இழுப்பீடு வழங்க வேண்டும்!

Advertisements

திருவள்ளூர் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் இழுப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் அண்மையில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 12000 எக்டர் பரப்பளவில் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 6500 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் முப்பதாயிரம் ரூபாய் வரை ஏக்கர் ஒன்றுக்கு செலவு செய்யப்பட்ட நிலையில் அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறிபாதிக்கப்பட்டவிவசாயிகள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இழப்பீட்டுத் தொகையை ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி, கொசத்தலை ஆற்றி தண்ணீர் சென்று வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் இரண்டு ஆறுகளிலும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை, 100 கிலோ மீட்டருக்கு ஒரு போர்வெல் அமைக்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை பாசனம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

அப்போது சேதம் அடைந்த பயிர்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தாமல் புறக்கணிப்பதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *