போர்களை நிறுத்தி மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி – டிரம்ப்

Advertisements

போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி என அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது, நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா கொரினா தன்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார் என்றும் அப்போது அவர் நோபல் பரிசை தனக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், நோபல் பரிசை மரியா பெறுவது சரிதான் என்றும் அவருடைய போராட்டத்தில் தானும் பங்கு கொண்டு உதவி செய்து இருப்பதாகக் கூறினார். மேலும், போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த மனநிறைவே தனக்கு போதுமானது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *