
அரசியல் ரீதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பல கட்சிகளுக்கு பல்டி அடித்த பரபரப்பு அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தும் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் நடிகர் விஜய் உடன் திருப்பாச்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் அடுத்த கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் .
அது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அவர் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்கிறார். இது பற்றி அவரே பரபரப்பாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.இதனிடையே நடிகர் விஜய் உடன் ஏராளமான திரைப்படங்களில் ஜோடியாக நடித்த திரிஷா என்ன முடிவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் தமிழக வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் .
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உலா வந்த நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்பொழுது நிச்சயமாக அவருடன் சினிமா நட்சத்திரங்களும் தமிழக வெற்றிகழகத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி தவிர சினிமா நட்சத்திரங்கள் யாரும் தமிழக வெற்றி கழகத்தில் இணையவில்லை.
இயக்குனர்தள் சமுத்திரக்கனி மற்றும் பார்த்திபன் உட்பட நடிகர் விஜய் அரசியல் குறித்து ஆதரவு தெரிவித்த போதிலும் தமிழக வெற்றி கழகத்தில் இன்னமும் சினிமா நட்சத்திரங்கள் யாரும் கால்பதிக்கவில்லை.இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தில் நுழைந்த தாடி பாலாஜி அதற்குள்ளாகவே அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார் என்பது திரை மறைவு செய்தியாகும் . இந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு உடன்பிறந்த நடிகையாக நடித்தவர் நடிகை மல்லிகா .
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாள சினிமா மூவம் தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்த வகையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் . பிறகு பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க , அஜித் உடன் திருப்பதி , ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும் , தோட்டா உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்த படம் சென்னையில் ஒரு நாள் என்ற படமாகும் அதன் பிறகு மலையாள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் .
இவர் நடிகர் விஜய் உடன் திருப்பாச்சி படத்தில் தங்கையாக நடித்த காட்சிகள் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தவை. அந்த படத்தில் தங்கை மல்லிகாவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் செய்யும் சேஷ்டைகளும் வில்லன்களுடன் போடும் சண்டை காட்சிகளும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நடிகை திரிஷாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விஜயை காதலித்து கரம் பிடிப்பார் என்பது மையக்கதை ஆகும் .
தற்பொழுது நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகை மல்லிகா பரபரப்பு குரல் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.விஜய் பற்றி அவர் கருத்து தெரிவிக்கும் பொழுது, நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர். அதனை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் . அவரை புரிந்து கொள்ளாமல் மற்ற கட்சியினர் தவறாக பேசுகிறார்கள் அவரது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் .
வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் அழைத்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிச்சயமாக நான் செல்வேன் என தெரிவித்திருக்கிறார் . இது மட்டுமல்லாமல் , அவர் முன்னதாக விஜய் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார் . ஆனால் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் மக்களிடம் பேசும் பொழுது நிறைய மாற்றம் தெரிகிறது .
அதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது . அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி நடிக்க மாட்டார். நல்லது செய்ய வந்தால் தப்பாக சில விஷயம் நடக்கும் ஆனால் கடைசியில் அவர்தான் ஜெயிப்பார். என்று தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் விஜய்யைபொறுத்த வரையில் தற்பொழுது சினிமா நட்சத்திரங்கள் யாரையும் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்யவில்லை. காரணம் அரசியல் என்பது சினிமாவாக மாறிவிடும் எதிர்க்கட்சியினர். இதனையே மிகப்பெரிய குற்றச்சாட்டாக மாற்றி விடுவார்கள் எனவே அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என நடிகர் விஜய் கருதுகிறார் .
அதேசமயம் தேர்தல் சமயத்தில் தனக்கு பிரச்சாரம் செய்வதற்கு சினிமா நட்சத்திரங்கள் தேவை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார் . அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் ஜனவரி மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கான அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்கள் இதற்காக திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் நடிகை திரிஷா தற்பொழுது முன்னணி கதா நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரையில் நடிகர் விஜயுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கிறார் . இந்த நிலையில் நடிகர் விஜய் தொடர்பாக அவர் தெளிவான முடிவில் இருக்கிறார். நடிகர் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுப்பது தவிர நேரடி களத்திலோ திரை மறைவு களத்திலோ அவர் இறங்குவதற்கு தயாராக இல்லை .
எனவே அவர் விஜய்க்குஆதரவாக குரல் கொடுப்பாரே தவிர அரசியலிலோ அல்லது தேர்தல் களத்திலோ அவர் இறங்கப் போவதில்லை என்பது தெளிவான முடிவாகும்.

