தராபுர பிரச்சாரத்தில் தான் செய்த சாதனை சொல்லி ஓட்டுக் கேட்க போனாரா அல்லது முதல்வரை பிரச்சாரத்தில் கிழித்து தொங்கவிட பிரச்சாரம் சென்றாரா என்னவென்றே தெரியவில்லை. அவர் முதல்வரை நாறு நாறாக கிழித்த கதையை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூழன்று சூழன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஐந்து முனைப் போட்டி நிலவும் இந்த சூழலில், தேர்தல் களம் நாளுக்கு நாள் குபுகுபுவென சூடுபிடித்து வருகிறது.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தாராபுரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாராபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் விஜய்யை புதுபுதுசான வாத்தைகளால் கடுமையான வார்த்தைகளால் வச்சு செய்திருக்கிறார்.
இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவினரை வைத்துத்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் இன்றைக்கு ஆளாகிவிட்டது.தமிழகத்தை என்றென்றும் ஆள்வது அதிமுகதான். அதிமுகவினரை நம்பியே விஜய் அரசியலில் மக்களுக்கு ஒன்னும் செய்யாமல் தற்போது நாடகத்தை நடத்திக் கெண்டிருக்கிறார்.
அதிமுகவினரின் கதவை ஏன் தட்டிப் பிச்சை எடுப்பதுபோல் வாக்கு சேகரிக்கிறீர்கள்?” என்று என்று காரச்சாரமான கேள்வியை முன்வைத்தார். மேலும் பேசிய அவர், “உங்கள் வீட்டில் அண்ணனாக இருப்பேன்.. தம்பியாக இருப்பேன்.. மாமனாக இருப்பேன், மச்சானாக இருப்போன், என்று அடுக்குமொழியெல்லாம் சொல்வதெல்லாம் எவ்வளவு பச்சைப் பொய்.. அண்டைப்பொய், ஆகாசப் பொய்
ஆகப் பெரும் பாசம் என்று சொன்னால்.. தாய் தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளோடு வாழவேண்டும். அதற்கு வக்கில்லை இவர் பிரச்சாரத்திற்கு பேச வந்துவிட்டார். மேடைகளில் வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்றி எங்களைப்போல குடும்பஸ்தனாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம். மனைவி, பிள்ளைகளுடன் வாழ்வதுதான் உண்மையான பாசம். மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி வாக்குகளைப் பெறுபவர்தான் சிஎம் விஜய்” என கழுவி கழுவி முதல்வர் என்றும் பாராமல் ஊத்தியிருக்கிறார் அதிமுக எடப்பாடி அவர்கள்.
ஆக பீனிக்ஸ் பறவையின் நாயகன் எடப்பாடி அவர்கள் ரசிகர்களின் இளயதளபதியை வச்சு செய்த கருத்து குறித்து மதிப்புடன் உங்கள் கருத்தை நம் ஜெம் கமென்ட்ல் பகிரவும்.


