Advertisements

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையான மோதல் ஒரு புறம் இருக்க கட்சி நிர்வாகிகளிடம் விருப்பம் மனுக்களை பெற்று வருகிறார் அன்புமணி. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு சாதகமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேரம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அதனால்தான் அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளிடம் விருப்பமான பெற்று வருகிறார் என்கின்றனர்.
இந்நிலையில், 35 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் என பேரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில் இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை இழந்ததில்லை என்ற சாதனையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருகிறார். இதை அடுத்து மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜகவும் சேர்ந்தால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால் தான் அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் அதற்கு பிறகு அதிமுக கூட்டணி வலுவாகாத நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் கூட்டணி டேக் ஆஃப் ஆவதில் சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. இது தரப்புமே நாங்கள்தான் பாமக என கூறிவந்த நிலையில் யாருடன் பேச்சு நடத்துவது என அதிமுக நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் அன்புமணி தரப்பை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியிருக்கும் நிலையில் அதிமுக தரப்பும் அன்புமணி தரப்பும் உற்சாகமடைந்திருக்கிறது.
கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கமே நிற்கும் நிலையில் அவர்களையே கட்சியின் தலைமை என கருதி அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை பாமக இறுதி செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் பாஜக தரப்பிலும் அன்புமணியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே தமிழக வெற்றிக்கழகமும் பாமக தரப்பை அனுகியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பாமகவின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அன்புமணி கேட்ட நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 35 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள அன்புமணி தரப்பு நிர்வாகிகளிடம் விருப்பம் மனுக்களை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்து இருக்கிறதோ அங்கெல்லாம் பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம், விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாமக வேட்பாளர்கள் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த அதிமுக கூட்டணி தற்போது மெல்ல மெல்ல டேக் ஆஃப் ஆக தொடங்கி இருக்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக பல்வேறு கட்சிகளுடன் கூட்டாளி பேச்சுவார்த்தையை துவக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார் என்கின்றனர். அதிமுகவினர் இது ஒருபுறம் இருக்க அன்புமணி தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ராமதாஸ் தரப்பு தயாராகி வந்தாலும் சட்ட திட்டங்கள், கட்சியின் விதிகள், தேர்தல் ஆணையம் ஆகியவை அன்புமணி தரப்புக்கு சாதகமாகவும், தற்போது அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில் ராமதாஸ் முகாம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Advertisements


