கோவையா..கரூரா..எங்கே போட்டி..சிரித்து கொண்டே செந்தில் பாலாஜி..

Advertisements
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக வலுவாகவுள்ள கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற இந்தமுறை திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கரூரில் இருந்து மாறி கோவையில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதற்கு கரூர் மக்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை விவரித்து செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கபட்டுள்ளனரா என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும்.
அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்..வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆராய்ந்த பிறகு தான் கருத்துகளை பகிர முடியும். கடந்த தேர்தல்களில் எவ்வளவு வாக்கு பதிவாகியுள்றது என்பதை பார்த்தாலே , மீதமுள்ள சதவீதம் தெரிந்துவிடும். நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த வருடம் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளை கொடுப்பது தேர்தல் ஆணையம் தான்.அதிமுக ஆட்சியில் பாஜக அவர்களுடன் கூட்டணியில் இருந்தபோது கள்ள ஓட்டுக்கள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா. அப்போது நல்ல ஓட்டுக்களாக இருந்தது, இப்போது கள்ள ஓட்டுக்கள் ஆகிவிட்டதா. இதெல்லாம் நன்கு தெரிந்தும் நயினார் நாகேந்திரன் திமுகவை விமர்சிப்பதில் நியாமில்லை.தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது.
இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். திமுகவை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளனர். பாஜக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் திமுகவை மட்டுமே விமர்சிப்பார்கள்.
மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக திமுக உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அதிமுகவும் சரி புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள்.மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் திமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி தரும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.
நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது.கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூரில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு.
திருப்பூர் மாவட்டத்தில் குப்பை எடுக்கும் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில்
நிறைய வாக்குறுதிகளை அள்ளி விட்டார். அவர் உடனே பொறுப்பேற்பது போல தோற்றத்தை உருவாக்கினார்கள்.இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்களுக்கும் அப்படி ஒரு தோற்றம் கொடுக்கிறார்கள்.
முதல்வரை தேர்வு செய்வதில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் தீர்மானிக்க முடியாது. ஒருவரை புகழ்ந்து எழுதுவதால் மாற்றங்களை உருவாக்கி விட முடியாது. பாஜக அரசு பொறுப்பேற்ற இந்த 12 வருடங்களில் கோவை மாவட்டத்திற்கு செய்த சிறப்பு திட்டம் என்ன. தமிழகத்தின் வளர்ச்சியில் பாஜகவிற்கு அக்கறையில்லை.” என்றார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *