புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிற்கு அடிமையாக இருப்பார்!

Advertisements
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிற்கு அடிமையாக இருப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் தீவிரவாத செயலை கைவிட்டு திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமுல்படுத்தியதால் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.  மேலும் வரும் மே ஒன்று  முதல் 30-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மத்திய அமலாக்கத்துறை கண்டித்தும்,  பாஜக கூட்டணி ஆட்சி ஊழல்களை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி அடிமையாக இருப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *