ஈரான் – அமெரிக்கா போர் முடிந்தால் சிலிண்டர் விலை குறையும்…..!

ஈரான், அமெரிக்கா இடையிலான போர் விவகாரம் முடிவுக்கு வந்ததும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியார்களை சந்தித்து பேசினார்.
அப்போது, வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என்றும் அந்தந்த எண்எணய் நிறுவனங்கள்தான் உயர்த்தி உள்ளன என்றும் தெரிவித்தார். விலையை உயர்த்தும் அதிகாரத்தை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போது தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தது.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், எரிவாயு கிடைப்பதில்லை. ஆனால், நமது நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான், அமெரிக்கா இடையிலான போர் விவகாரம் முடிவுக்கு வந்ததும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *