
சேலத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக நிா்வாகிகள் மனு அளித்தனா்.
கரூர் துயரச் சம்பவம் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சேலத்தில் மீண்டும் தவெக பிரசாரம் பயணம் தொடங்கப்போவதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக, சேலத்தில் உள்ள தவெக மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் பாா்த்திபன் தலைமையிலான நிா்வாகிகள் மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளித்தனா்.
இதில், வருகின்ற 4 ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகியப் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற 4 ஆம் தேதி காா்த்திகை தீபம் என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையினர் ஆலோசனை செய்து தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.



