போர் எதிரொலியாக, ஈரானில் தங்கி படித்து வந்த 110 இந்திய மாணவர்கள், தாயகம் திரும்பினர். ஈரானில் இஸ்ரேல் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகும் நிலையில், ஈரான் நாட்டில் இருந்த 110 மாணவா்கள் நேற்று தாய்நாட்டிற்கு விமானம் மூலம் புறப்பட்டனா்.
ஈரானில் இருந்து நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள், ஈரானின் தலைநகா் யெரெவானில் இருந்து புறப்பட்டனா். இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் கட்டமாக ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து இந்திய மாணவா்கள், நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. மேலும், ஈரானில் உள்ள பிற இந்தியா்களுடன் இந்திய தூதரகம் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாகவும், அவா்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படுவதாகவும்’ தெரிவித்தது.
ஈரான் தலைநகா் டெஹ்ரானைக் குறிவைத்து இஸ்ரேல் தொடா்ந்து வான் தாக்குதல் நடத்தில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

