வங்கதேசத்தில் கல்லூரியின் மீது பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏராளமானோர் இறந்திருக்கக்கூடும் என்று பதினோராம் வகுப்பு மாணவி சஞ்சிதா அக்தர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் தான் மட்டுமே பத்துப் பன்னிரண்டு உடல்களைக் கண்டதாகத் தெரிவித்தார்.
21 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளதாகவும், அதற்கு மாறாகக் கூடுதல் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் நெருக்கமான இடத்தில் மிகத் தாழ்வான உயரத்தில் பயிற்சி விமானத்தை இயக்கியது ஏன் என்றும் அவர் வினவினார்.



