
செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத நெருக்கடிக்கு பிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு நேபாளம் திரும்பி வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த இரு மாதங்களாக நேபாளத்தில் இயல்பு நிலை நீடித்து வரும் நிலையில், இன்று திடீரென வன்முறை வெடித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த இரு மாதங்களாக இயல்பு நிலை நீடித்து வந்த நிலையில், இன்று திடீரென வன்முறை வெடித்துள்ளது. இம்மோதலால், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நேபாளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் Gen Z இளைஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து வீதியில் இறங்கிய இளைஞர்கள், நேபாளத்தில் அப்போது பிரதமராக இருந்த கேபி சர்மா ஒலிக்கு எதிராகவும் தீவிரமாக போராட தொடங்கினர்.
இளைஞர்களின் போராட்டத்தை கையாள முடியாமல் கேபி சர்மா ஒலி திணறினார். நிலைமை நாளுக்கு நாள் கையை மீறி போனது. அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்த மோதலால், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நேபாளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.



