23 தலீபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்.!

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த 23 தலீபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தானில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது.

அப்போது, ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில், 23 தலீபான் பயங்கரவாதிகள் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய திரா பள்ளத்தாக்கில் ஒரு வீட்டின் அருகே பீரங்கி குண்டு விழுந்தது. இதில் ஒரு ஆணும், அவருடைய மகனும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 16 வெடிகுண்டுகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது தலீபான் இயக்க தளபதி ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *