
இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சேலத்தில் இன்று வருகை தருகிறார். சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இவ்விழாவில், கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் சேலத்தில் வருகை தர உள்ளார். இதன் பின்னர், அங்கிருந்து காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்கிறாா்.
இதையடுத்து, புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா். அதன்பிறகு பிற்பகல் விமானம் மூலம் தில்லி புறப்பட்டு செல்கிறாா். இதைத்தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவா் வருகையொட்டி மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையிலான அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .


