
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எரித்துக் கொலைசெய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலி! தன்னை விட 6 வயது குறைவான வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல் மயக்கத்தில் கணவன் மற்றும் 3 குழந்தைகளைப் பிரிந்து வந்து ஆசை நாயகன் உடன் வாழ்ந்த வாழ்க்கை சாம்பலாய் போன சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி கருமத்தான்காடு பகுதியில் வல்லரசு என்பவரின் வீட்டின் முன்னால் பெண்ணின் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகத் தேக்கல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றிலும் எரிந்த நிலையில் எலும்புகூடாய், இருந்த பெண்ணின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தது பெண் யார்? எதற்காக எரிக்கப்பட்டார்? தானேஅந்த பெண்ணே தன்னை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாழப்பாடி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிலும் எறிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் சுகுணா(30) எனத் தெரியவந்தது. மேலும் கடந்த 6 மாத காலமாகக் கழுத்தில் தாலியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வல்லரசு(24) என்ற வாலிபருடன் அதே பகுதியில் அதே இடத்தில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. சமபவ இடத்திலிருந்து தலைமறைவான வல்லரசை இரவோடு இரவாகக் கைது செய்த போலீசார் கள்ளகாதல் மனைவியை எரித்துக் கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ன? காரணத்திற்காகச் சுகுணா எரிக்கப்ட்டாரெனப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமூகஊடக காதல்தான் சுகுணா வாழ்க்கை சாம்பல் ஆகக் காரணம் என்ற பகீர் தகவல்கள் வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல் மயக்கத்தில் கணவன் குழந்தைகளைப் பிரிந்து வந்து பலியான சோகம்! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா(வயது30). சுகுணாவின் கணவர் கண்ணன் மற்றும் இவர்களுக்கு மேலும் 3 பெண் குழந்தைகள் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சுகுணாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வல்லரசு(24). என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காதல் மயக்கத்தில் வல்லரசுடன் குடும்பம் நடத்த விரும்பிய சுகுணா தன் கணவர் மற்றும் தன் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு காதல் மயக்கத்தில் வல்லரசுடன் வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 6 மாத காலமாகச் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி கருமத்தான்காடு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கள்ளக்காதலன் வல்லரசு உடன் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று சுகுணாவின் உடல் முற்றிலும் நெருப்பில் எரிந்த நிலையில் எலும்புகூடாய் மீட்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக இன்ஸ்டாகிராம் காதலி சுகுணா எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் கைது செய்யப்பட்ட வல்லரசு வாக்கு மூலத்தில்தான் தெரியவரும் என்பதால் இந்த இன்ஸ்டாகிராம்இன் காதல் விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த கைதான வல்லரசுமீது ஒரு போக்சோ வழக்கு மற்றும் தன் உறவினரை வெட்டிய கொலைவழக்கு எனக்கு இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வெளியான நிலையில் சாமி வந்து சாமியாடும் பழக்கமுள்ள வல்லரசு ஒரு சைக்கோ என்பன போன்ற புதுபுது தகவல்கள் வெளியாகி இந்த வழக்கு தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எரித்துக் கொலைசெய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலி! மற்றும் தன்னை விட 6 வயது குறைவான வாலிபருடன் ஏற்பட்ட இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல் மயக்கத்தில் கணவன் மற்றும் 3 குழந்தைகளைப் பிரிந்து வந்து ஆசை நாயகன் உடன் வாழ்ந்த வாழ்க்கை சாம்பலாய் போன சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

