தென்கொரியாவைத் தாக்க கிம் ஜோங் உன் உத்தரவு.!

Advertisements

தென்கொரியாவைத் தாக்கும் திறன் கொண்ட சிறிய ரக அணு ஆயுதங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் தலைநகா் பியாங்கியாங்கில் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாட்டின் நிறைவு நாளில் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவர் தென்கொரியாவுடன் இனி எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும், அந்நாட்டை நிரந்தர எதிரி நாடாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

தென்கொரியாவைத் தாக்கும் திறன் கொண்ட சிறிய ரக அணு ஆயுதங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு கிம் ஜோங் உன் உத்தரவிட்டார். இந்த ராணுவ பலமானது வடகொரியாவை யாராலும் அசைக்க முடியாத அணுஆயுத நாடாக மாற்றியுள்ளது என்றார்.

அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை நீக்கினால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்றும், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்தே பேச்சுவார்த்தை அமையும் என அவா் தெளிவுபடுத்தினாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *