சினேகன் – கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தை குவியும் வாழ்த்துகள்!

Advertisements

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதித் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

“தாயே எந்தன் மகளாகவும்… மகளே எந்தன் தாயாகவும்… இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்.”

“இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.”

இவ்வாறு ஸ்நேகன் மகிழ்ச்சியாகப் பதிவிட தற்போது அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *