
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை திருச்சியில் தொடங்கி அரியலூர், காஞ்சிபுரம், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தினார். கரூர் சம்பவத்தில் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..ஆகவே விஜயின் பிரச்சாரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதன் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி (பிரச்சாரம் ) நடைபெறவில்லை.
பின்னர் ,பல விதிமுறைகளுக்கு உட்பட்டு ஈரோட்டில் பொதுக்கூட்டம் மற்றும் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன. இந்நிலையில் , தஞ்சை மாவட்டத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.


