சூரியனை மறைத்த மேகங்கள்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…!

Advertisements

கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதய நிகழ்வை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திரிவேணி சங்கமம் பகுதியில்  மேகமூட்டம் காரணமாக சூரிய உதய நிகழ்வை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் திருவேணி சங்கமம் கடற்கரையில் கடலில் நீராடி அருகில் உளள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகு சவாரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி நடைபாலம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகையால் உள்ளூர் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *