மார்க்சிஸ்ட் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் : பெ.சண்முகம் கண்டனம்.!

Advertisements

கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் சண்முகம்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் சண்முகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கள்ளக்குறிச்சி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் எழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், ‘பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்’ கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக் கூறியுள்ளார். இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒருவர் மட்டுமே கைது செய்ய்யப்பட்ட நிலையில் அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *