“திட்டமிட்ட வதந்தி”.. பாமக கூட்டணி சர்ச்சை குறித்து விசிகவின் அதிரடி விளக்கம்.!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போவதாகச் சமீபத்தில் தகவல்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவின் கூட்டணி கணக்குகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தச் செய்தி அரசியல் அரங்கில் சலசலப்பை உண்டக்கியது.

ஆனால், இந்தத் தகவலுக்கு விசிக தரப்பிலிருந்து கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்கிற செய்தியைச் சிலர் திட்டமிட்டு வதந்தியாகப் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் அடிப்படையற்றது” என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், தங்களது கொள்கை நிலைப்பாடு குறித்து விளக்கிய விசிக, “பாஜகவும், பாமகவும் இடம்பெற்றுள்ள எந்த ஒரு அணியிலும் விசிக ஒருபோதும் இருக்காது என்பதை கடந்த 15 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம், அதிலும் உறுதியாக இருக்கிறோம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதன் மூலம் தவெக – பாமக கூட்டணி குறித்த வதரிகளுக்கு விசிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *