
தாய் மொழி கண்போன்றது என்றும் காலத்தின் தேவை கருதி இந்தி மொழியை கற்கலாம் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த ஆண்டு புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து இருப்பதாகத் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அப்துல்கலாம், தமிழ் வழியில் கல்வி பயின்றவர் என்றும் தமிழில் ஒரு ஜனாதிபதியே இருப்பதாகவும் சூட்டிகாட்டினார். தமிழை குறைத்து சொல்லக்கூடிய ஒரு சமூகம் இருந்தால், அந்த சமூகம் அழிந்து போகும் என்று கூறினார். தாய் மொழி கண்போன்றது என்றும் காலத்தின் தேவை கருதி இந்தி மொழியையும் கற்கலாம் என்று கூறினார்.



