காவிரி விவகாரத்தில் தவெக அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி.!

Advertisements

காவிரி விவகாரத்தில் அதிமுக பெற்றுத்தந்த நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்ற முடியாத அரசாகத் தவெக அரசு உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டிச் சென்னை கிண்டியில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை ரவி, வேளச்சேரி அசோக் ஆகியோர் இருந்தனர்.

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தபின் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது, காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை எனக் கூறினார்.
பேட்டி – எடப்பாடி பழனிச்சாமி

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *