முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய தினகரன்! பரபரப்பு குற்றச்சாட்டு.!

ஆட்சி அமைக்கத் தில்லுமுல்லு செய்ததாலேயே முதலமைச்சர் விஜய், ஸ்டாலினையும் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திக்கத் தயக்கம் காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், முந்தைய ஆட்சிக்காலங்களில் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர்களின் ஆலோசனைக் கேட்டால் காவிரிப் பிரச்சனையை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் விவசாயிகளின் எண்ணம் எனத் தெரிவித்தார்.

அதை இந்த அரசு தவிர்ப்பதற்கு காரணம், ஆட்சி அமைப்பதற்கே அவர்கள் செய்த தில்லுமுல்லுகள், களவாணித்தனங்கள் தான் என்று தினகரன் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *