தமிழக வாழ்வாதாரங்களைக் காக்க முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்: வைகோ பேட்டி…!

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ரஜினி அளித்த பேட்டி குறித்து பதிலளித்த அவர், அது அவருடைய சொந்த கருத்து என்று குறிப்பிட்டார்.

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மும்மொழி கொள்கையை திமுக ஆட்சியில் ஏற்றுக் கொள்ளாமல் இருந்த அதே நிலைப்பாட்டை தான் இன்றைய அரசும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனைமங்கல செப்பேடுக்கெல்லை விட பழமையான செப்பேடுகள் சோழ மண்டலத்தின் பல்வேறு இடங்களில் உள்ளதால் அதை கண்டறிந்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *