Advertisements

ஈரான் மிக வேகமாக செயல்பட வேண்டும் இல்லையெனில், அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளப் பக்கத்தில், ஈரானுக்கு நேரம் குறைந்துக்கொண்டே போகிறது என்று தெரிவித்தார். அவர்கள் மிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும் இல்லையெனில், அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார். எனவே, காலம் பொன்னானது என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஈரான் அரசு, பிராந்தியம் முழுவதும், குறிப்பாக லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து, தங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டு, வெளிநாட்டு சொத்துக்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
Advertisements




