EPS:பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதா…திமுக அரசுக்கு இ.பி.எஸ், கடும் கண்டனம்!

Advertisements

திமுக அரசுப் பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடு விளையாடுவதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்குப் போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாகத் தட்டுப்பாட்டில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாகச் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடும் விளையாடுவதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனவே, உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *