சென்னையில் முதல்வர் ஜோசப் விஜய் – டி.கே. சிவக்குமார் அதிரடி சந்திப்பு!

Advertisements
சென்னையை அடுத்த கோவளத்தில் ஆகஸ்டு 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தெலுங்கானா மாநிலங்களின் முதல்-அமைச்சர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்-மந்திரியும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
தற்போது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தாலும், முதல்வர் ஜோசப் விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, வரும் 20-ந் தேதி மாலை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் தனியாகச் சந்தித்துப் பேச இருக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து முக்கியமாகப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஏற்கனவே கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் இரு முதல்-அமைச்சர்களும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு போராட்டம் வெடித்ததால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் விஜய்யை பெங்களூரு வர வேண்டாம் எனத் தவிர்த்திருந்தார். இந்தச் சூழலில் கோவளம் மாநாட்டின் இடையே நடைபெற உள்ள இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *