உத்திரமேரூரில் புதிதாகக் கட்டப்பட்ட பேரூராட்சி கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்ததையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் குத்து விளக்கேற்றித் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் புதிதாகக் கட்டப்பட்ட பேரூராட்சி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பேரூராட்சி கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும், அவர் பேரூராட்சியில் கழிவு நீர் அடைப்பு எடுப்பதற்காகப் புதிய வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரி வள்ளல், பேரூராட்சி துணைத் தலைவர் இளமதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



