உலகம் முழுவதும் வெளியானது விஜய்யின் ‘ஜனநாயகன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Advertisements

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரையிடப்படுகிறது.

 

இந்தப் படத்தைக் கொண்டாடுவதற்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் நேற்று இரவு முதலே ஆட்டம் பாட்டத்தைத் தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன.

 

விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியீடு
திரையரங்குகள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *